Search This Blog

Tuesday, November 7, 2017

மறுமை நாள் அடையாளம்

10/10/2017

மறுமை
நாள் அடையாளம்
1.  இறை நம்பிக்யை தடுமாற்றம்
2.  நேரங்களில் பரகத் எனும் அபிவிருத்தி எடுக்கப்பட்டுப் போய் விடும்.
3.  ஆடையணிந்தும் நிர்வாணிகளாக இருப்பார்கள்
4.  அரேபியத் தீபகற்பத்தில் செல்வம் பெருகி விடும்.
5.   தகுதியற்றவனிடம் ஆட்சி இருக்கும்
6.  முஸ்லிம்கள் அழிக்கப்படுதல்
7.    விபச்சாரம் குடி அதிகரிக்கும்
8.  தவறான  தொழிலும் நல்லது என ஆகும்
 قال الله تعالى في محكم التنزيل : يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ (1) يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُم بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ (2)
تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (1) الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلاً وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ (2) الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا مَّا تَرَى فِي خَلْقِ الرَّحْمَنِ مِن تَفَاوُتٍ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَى مِن فُطُورٍ (3) ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئاً وَهُوَ حَسِيرٌ (4) وَلَقَدْ زَيَّنَّا السَّمَاء الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِّلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ
படைப்வனும் அழிப்பவனும் அவனே
எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
67:2        .உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
67:3        .அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர், பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?
67:4        .பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார், உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.
67:5        .அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம்.
இஸ்லாமிய நாடாக இருப்பினும் சரி, அந்நிய நாடாக இருப்பினும் சரி, எல்லா இடங்களிலும் முஸ்லிம்கள் பெரும் சிரமங்களோடும், சோதனைகளோடும், பற்பல குழப்பங்களுக்கு மத்தியிலும் தங்களது வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு  குழப்பங்களும், சோதனைகளும் தொடர்ச்சியாக வருவது கியாம நாள் நெருங்கிவிட்டது என்பதையே நமக்கு எச்சரிக்கின்றது. ஏனெனில், அந்நாள் நெருங்க நெருங்க குழப்பங்கள் அதிகரிக்கும்.
முஸ்லிம்கள் கடல் போன்று இருந்தும் அலைக்கழிக்கப்படுவார்கள். அந்நாளில், எத்தனையோ சிறிய பெரிய அடையாளங்கள் வெளிப்படும் என்று 1439 வருடங்களுக்கு முன்பே நமது தலைவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்திருக்கிறார்கள்.
ஆங்காங்கே ஏற்படும் நிகழ்வுகளும், அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படும் சில சீற்றங்களும் கூட  இதனையே நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய கியாம நாளின் அடையாளங்களில் சிறியவையும், பெரியவையும் காளாண்கள் வெளிப்படுவதைப் போன்று ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை காலத்தின் கண்ணாடியில் தினம் தினம் நாம் கண்டு கொண்டே இருக்கின்றோம்.
சிறிய அடையாளங்கள்
அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம்தான். இதனை இறுதிக் காலம் வரை அல்லாஹ் பாதுகாப்பான். ஆரம்பக் காலத்தில் அல்லாஹ்வின் உதவியால் ஸஹாபாக்கள் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றி அதைப் பாதுகாத்தார்கள். ஆனால் இறுதிக் காலத்தில் இஸ்லாம் வெறும் பெயரில் இருக்குமே தவிர, அதன் வழிகாட்டல் படி செயல்படுபவர்களைக் காண்பது அரிதாக ஆகிவிடும்.
1.  இறை நம்பிக்கை (ஈமானில்) தடுமாற்றம்
கியாமத் நாளின் ஆரம்பத்தில் (தோன்றுவதற்கு முன்) இரவின் இருள் போல் குழப்பங்கள் ஏற்படும். காலையில் மூஃமினாக இருந்தவன்இ மாலையில் காபிராகி விடுவான். சிலர் தங்களின் மார்க்கத்தை இவ்வுலகப் பொருட்களுக்காக விற்பார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல் - திர்மிதீஇ அஹ்மத்.

                காலையில் மூஃமினாக இருந்தவன் மாலையில் காபிராகி விடுவான். மாலையில் மூஃமினாக இருந்தவன்இ காலையில் காபிராகி விடுவான் என்பதை ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் விளக்கும் போதுஇ 'பிறரது உயிர்இ உடமைஇ மரியாதை ஆகியவற்றைப் பேணுபவனாக காலையில் இருந்தவன்இ மாலையில் அவற்றைப் பறிக்கக் கூடியவனாக ஆவான். அதுபோல் மாலையில் பிறரது உயிர்இ உடமைஇ கண்ணியம் ஆகியவற்றைப் பேணியவன்இ காலையில் அவற்றைப் பறிப்பவனாக இருப்பான்' என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹிஷாம் - நூல் : திர்மிதீ.
தன்னை மூஃமின் என்றும் கூறும் பலரிடம்இ ஈமான் இவர்களிடம் உள்ளதா? என்று எண்ணும் அளவுக்கு அவர்களின் செயல்கள் அமைந்திருப்பதைக் காணலாம். மார்க்கத்தை அற்பக்காசுக்கும்இ பதவிக்கும் மாற்றிக் கொள்வோர் உண்டு. இது மூஃமின்களிடம் ஈமானில் ஏற்படும் தடுமாற்றம் எனலாம். இத்தகையத் தடுமாற்ற நிலை மறுமை நாள் வரப் போகிறது என்பதையே உறுதிப்படுத்துகிறது.
2. நேரங்களில் பரகத் எனும் அபிவிருத்தி எடுக்கப்பட்டுப் போய் விடும்.

'காலம் சுருங்கும் வரை அந்த (கியாம) நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு மாதத்தைப் போலாகி விடும். ஒரு மாதம் ஒரு (வார) ஜும்ஆவைப் போலாகி விடும். ஒரு வாரம் ஒரு நாளைப் போலாகி விடும். ஒரு நாள் ஒரு மணி(நேரத்தைப்) போன்று ஆகிவிடும். ஒரு மணி(நேரம்) நெருப்பைப் பற்ற வைத்து அணைக்கும் நேரம் போல் ஆகிவிடும்' என்று கூறினார்கள்.           (நூல்: திர்மிதி)

இவற்றையும் நாம் பார்க்கின்றோம். ஒரு வருடத்தின் நோன்பு முடிந்து 4-5 மாதங்கள் கூடக் கழிந்திருக்காததைப் போன்று தோன்றும். ஆனால், அதற்குள் அடுத்த வருடத்தினுடைய நோன்பு வந்து விடும். ஒரு மாதத்தின் முதல் தேதி ஏற்பட்டு ஒரு வாரம்கூடக் கழியாதது போல் தெரியும். அடுத்த மாதத்தின் முதல் திகதி வந்து விடும்.
ஆனால், நமக்கு முன்வாழ்ந்த உலமாக்களின், நல்லடியார்களின் நேரங்களில் எவ்வளவு பரகத்துகள் இருந்திருக்கின்றன என்பதை நாம் பார்த்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. நமக்கு ஒரு நாளைக்கு 24  மணி நேரம் இருப்பதைப் போன்றுதான் அவர்களுக்கும் இருந்தன. ஆனால், அவர்கள் படைத்த சாதனைகளை நம்மால் சிந்தித்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
அல்லாமா சுயூத்தி (ரஹ்மத்துலாஹி அலைஹி) அவர்களுடைய வாழ்க்கையை
அவர்கள் தங்களின் ஜலாலைன் என்ற (தஃப்ஸீர்)குர்ஆன் விளக்கவுரையில் 15 ஜூஸ்வுக்கு மாத்;திரம் வெறும் 40 நாட்களில் விரிவுரை எழுதி முடித்துள்ளார்கள். ஆனால், அப்போது அவர்களின் வயதோ வெறும் 22தான். இங்குள்ள அநேகமான அரபு மதரஸாக்களில் இந்த தஃப்ஸீருல் ஜலாலைன் என்ற கிதாபு கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஒரு வருடம் முழுவதும் கற்றுக் கொடுத்தாலும் கூட 10 அல்லது 15 ஜுஸ்உகளை முடிப்பதே சிரமமாகத்தான் இருக்கிறது.
இப்னு ஜரீர் (ரஹ்மத்துலாஹி அலைஹி) அவர்கள்
 பிரபலமான வரலாற்று ஆசிரியராவார். ஸஹாபாக்கள், தாபியீன்கள் ஆகியோருடைய வரலாறுகளைத் தினசரி நாற்பது பக்கங்கள் வீதம் நாற்பது ஆண்டுகள் வரை எழுதியுள்ளார்கள்.
இதுதான் அந்த நல்லடியார்களின் காலங்களில் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கயிருந்த பரகத் ஆகும்.
3. ஆடையணிந்தும் நிர்வாணிகளாக இருப்பார்கள்

'இரண்டு பிரிவினர் நரகவாசிகள். அவர்களை நான் கண்டதில்லை. (அவர்களில் முதல்) கூட்டத்தினர் மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பார்கள். அதைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பார்கள். (இரண்டாவது கூட்டத்தினர்) பெண்கள் அவர்கள் ஆடையணிந்தும் நிர்வாணமானவர்களாக இருப்பார்கள்.

(ஆண்களைத் தங்களின் பக்கம்) சாய்க்கக்கூடியவர்களாகவும், இவர்கள் அவர்களின் பக்கம் சாயக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் தலை முடி சாய்ந்த(வாறு நடக்கும்) ஒட்டகத்தின் திமிலைப் போன்றிருக்கும். அவர்கள் சுவர்க்கத்தில் நுழைவதென்ன அதன் நறுமணத்தைக் கூட நுகர மாட்டார்கள். அதன் நறுமணமோ எத்தனையோ பயண தூரத்திற்கு வீசக்கூடியதாக இருக்கும்.' (நூல்: முஸ்லிம்)
ஆனால்; கியாம நாளின் நெருக்கத்;தில் வரும் பெண்களைப் பற்றி 'அவர்கள் ஆடையணிந்தும் நிர்வாணிகளாக இருப்பார்கள் என்று இந்த ஹதீஸில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறியுள்ளார்கள்.
இதன் அர்த்தம் என்னவென்றால், அரைகுறையான ஆடைகளயோ, உடல் தெரியக்கூடிய அளவுக்கு மெல்லிய ஆடைகளையோ அல்லது மிக இறுக்கமான ஆடைகளையோ அணிவதாகும்.
4. அரேபியத் தீபகற்பத்தில் செல்வம் பெருகி விடும்.

 'செல்வம் பெருகி, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளாகவும், சோலைவனங்களாகவும் மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த (கியாமத்)நாள் ஏற்படாது.' (நூல்;: முஸ்லிம், எண்:1681)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த சிறிய அடையாளங்களில் அநேகமானவற்றை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கின்றோம். அவ்வாறே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சில பெரிய அடையாளங்களையும் சொல்லியிருக்கிறார்கள். அப்பெரிய அடையாளங்கள் இன்னும் நிகழாவிட்டாலும், அவை நிகழ்வதற்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன. அவற்றுள் சில இதோ பின்வருமாறு:
5.  தகுதி யற்றவனிடம் ஆட்சி இருக்கும்

தகுதியற்றவனிடம் ஒப்படைக்கப்படும் போது மறுமை நாளை எதிர்பார்த்துக்கொள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)இ நூல் - புஹாரி

தகுதியற்றவனிடம் ஆட்சியும் அதிகாரமும்இ நீதி நிர்வாகமும் ஒப்படைக்கப்படும் அவலம் தற்போது ஏற்பட்டுவிட்டது என்பதை எவரும் மறுக்க மாட்டார். இறையச்சமும்இ நேர்மையும் உள்ள ஒருவனே அதிகாரம் பெற்றவனாக இருக்க வேண்டும். இன்றோஇ தகுதி இல்லாத நபர்கள் எல்லாம் ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படும் நிலையைக் காண்கிறோம். இதுவும் மறுமை நாள் சமீபித்து விட்டது என்பதற்கான  அடையாளமாகும்.



6 . முஸ்லிம்கள் அழிக்கப்படுதல்

 முஸ்லிம்களுக்கும் எதிரிகளுக்கும் மத்தியில் நடந்த போர்களை நாம் பார்த்தோமென்றால் அவற்றில் பெரும்பாலும் எதிரிகளை விட முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாகவே இருப்பார்கள். எதிரிகளின் உள்ளத்தில் முஸ்லிம்களைப் பற்றிய மரியாதை கலந்த அச்சத்தை அல்லாஹ் போட்டு வைத்திருந்தது மிக முக்கியமான காரணம் என்பதுதான் ஹதீஸ்களிலிருந்து நமக்கு விளங்குகிறது.
 இறுதி நாளின் நெருக்கத்தில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பார்கள். அப்படியிருந்தும்கூட, அவர்களிடம் உலக ஆசை, மரண பயம் ஆகிய இரண்டும் உண்டானதால் நம்மீது உள்ள அச்சம் அவர்களின் உள்ளங்களை விட்டு எடுபட்டு, சர்வசாதாரணமாக அவர்கள் நம்மைத் தாக்கத் துணிந்து விடுவார்கள்.
 'ஒரு நேரம் வரும். உலக நாடுகளில் உள்ள பல சமூகங்கள்  உங்களுக்கு (இஸ்லாத்திற்கு) எதிராக ஒன்று கூடுவார்கள். இன்னும் உங்களுக்கு எதிராகச் செயல்பட மற்றவர்களுக்கும் அழைப்புக் கொடுப்;பார்கள். அந்த அழைப்பு எப்படி இருக்கும் என்றால், சாப்பிடக்கூடியவன் உணவுத் தட்டின் பக்கம் மற்றவர்களை அழைப்பதைப் போன்று இருக்கும்.'
'அந்நாளில் நாம் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருப்போமா?' என்று ஒரு நபித்தோழர் கேட்டார்.
அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: 'இல்லை. நீங்கள் எண்ணிக்கையில்  அதிகமாக இருப்பீர்கள். ஆனால், வெள்ளத்தின் நுரையைப் போன்று இருப்பீர்கள். அல்லாஹ் உங்களைப் பற்றிய பயத்தை உங்கள் எதிரிகளின் மனதிலிருந்து எடுத்து விடுவான். உங்களின் உள்ளத்தில் 'வஹன்' வந்து விடும்.
'அல்லாஹ்வின் தூதரே! 'வஹன்' என்றால் என்ன? என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு 'உலக ஆசையும், மரணத்தைப் பற்றிய பயமும்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பதில் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)

ஆனால், இன்றோ முஸ்லிம்களை அவர்கள் அற்பமானவர்களாகக் கருதுகின்றனர்.  வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். நம்மோடு சேர்ந்து சாப்பிடுவதையோ, ஒன்றாகப் பயணம் செய்வதையோ அவர்கள் விரும்புவதும் இல்லை.
ஏனெனில், சுமார் 68-70 நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்றன. மேலும் ஐ.நா சபையில் 50 க்கும் மேற்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளனர்.
இவற்றின் உண்மையான காரணத்தை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இப்படிக் கூறினார்கள்.
Ø  'உலகஆசையும் (இதன் விளைவால் ஏற்படும்)
Ø  மரணத்தைப் பற்றிய பயமுமாகும்.'
7. விபச்சாரம்இ குடி அதிகரிக்கும்
கல்வி உயர்த்தப்படுவதும்இ அறியாமை மேலோங்குவதும்இ விபச்சாரம் பெருகுவதும்இ மதுபானம் அருந்தப்படுவதும்இ ஐம்பது பெண்களுக்கு ஓர் ஆண் நிர்வகிக்கும் அளவுக்கு பெண்கள் அதிகமாகி ஆண்கள் குறைவதும் மறுமை நாளின் அடையாளங்களாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அனஸ் இப்னு பாலிக் (ரலி) நூல் - புகாரீஇ முஸ்லிம்இ அஹ்மத்இ நஸயீ.



மறுமை நாளின் அடையாளங்களாக விபச்சாரமும்இ குடியும் பெருகும் என் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது இன்று உண்மையாகி உள்ளது. விபச்சார விடுதிகளை அரசே அங்கீகாரம் செய்து 'ரெட்லைட் ஏரியா' என ஒரு பகுதியை ஒதுக்கி விபச்சாராம் நடைபெற அனுமதிக்கிறது. நட்சத்திர ஹோட்டல் என்ற பெயரிலும் 'ஹை-லெவல்' விபச்சாரமும் அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது.

குடியைச் சொல்ல வேண்டியதே இல்லை. குடியைத் தடுக்க வேண்டிய அரசுஇ குடிபானங்களில் அரசு அங்கீகாரம் பெற்றவை என முத்திரையிட்டு விற்பதைக் காணலாம். அரசே மதுபானக் கடைகளின் ஏகபோக உரிமையாளர்களாக இருப்பது தான் ஆச்சரியம். எப்படியோஇ நபி (ஸல்) அவர்கள் கூறிய அடையாளம் உண்மை படுத்தப்பட்டது. இதன் மூலம் மறுமை விரைவில் வரும் என்பது உறுதியாகிறது.


8.  தவறான தொழிலும் நல்லது என ஆகும்


'ஒரு காலம் வரும்இ அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா ஹராமா? (அனுமதிக்கப்பட்டவையா இல்லையா?) என்பதை பொருட்படுத்த மாட்டார்கள்' என்று நபி (ஸல்) கூறினார்கள் - அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி)


நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த காலம் எல்லாம் போய்விட்டது. 'பணம் வேண்டும்இ சொத்துப் பெருக வேண்டும்' அதற்கு எந்த தொழிலாயினும் செய்யத் தயார் என்ற எண்ணத்தற்கு மனிதன் வந்துவிட்டான். தான் செய்யும் தொழில் மூலம் சமூகமே பாதிக்கும் என்று தெரிந்தாலும் அந்தத் தொழிலையே செய்கிறான்.

'இறைவனின் கோபத்தைப் பெற்றுத்தரும் தொழில் இது' எனத் தெரிந்தும் அந்தத் தொழிலையே செய்கிறான்.



1.       இறை நம்பிக்யை தடுமாற்றம்

2.       நேரங்களில் பரகத் எடுக்கப்பட்டுப் போய் விடும்.
3.       ஆடையணிந்தும் நிர்வாணிகளாக இருப்பார்கள்
4.       அரேபியத் தீபகற்பத்தில் செல்வம் பெருகி விடும்.
5.        தகுதியற்றவனிடம் ஆட்சி இருக்கும்
6.       முஸ்லிம்கள் அழிக்கப்படுதல்
7.        விபச்சாரம் குடி அதிகரிக்கும்
8.       தவறான  தொழிலும் நல்லது என ஆகும்

No comments:

Post a Comment