Search This Blog

Tuesday, November 7, 2017

ஹிஜ்ரத் தரும் படிப்பினை

ஹிஜ்ரத்
தரும்
படிப்பினை
29-௦9-2017






1.     ஹிஜ்ரத் ஏன்?
வரலாற்றில் பல நபிமார்கள் ஹிஜ்ரத் மேற்கொண்டுள்ளனர். இப்றாஹீம், மூஸா (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோரின் ஹிஜ்ரத் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து நபியவர்களின் ஹிஜ்ரத் எவ்வாறு வேறுபடுகின்றது? வெறுமனே ஒரு மனிதன், ஒரு சமூகம் ஓர் இடத் திலிருந்து இன்னோர் இடத்திற்கு புலம்பெயர்ந்த நிகழ்வுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வழங்குகின்றோம்?

2.     இஸ்லாமிய சமூகத்தை உருவாக்குவதற்கு
1.       நபியவர்கள் இந்தப் பூமிக்குக் கொண்டு வந்த அல்லாஹ்வுடைய தீன் வெறுமனே தனிமனிதர்களை மாத்திரம் உருவாக்குவதை இலக்காகக் கொண்டதல்ல, ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் வந்தவர்கள் தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.
2.       மக்கத்து மண்ணிலே தனி மனிதர்களாக இருந்து கொண்டு வணக்க வழிபாடுகளை, கிரியைகளைச் செய்வதற்கான வாய்ப்பு ஓரளவு இருந்தது. ஆனால், நபியவர்கள் விரும்பிய இஸ்லாமிய சமூகத்தை உருவாக்குவதற்கு மக்கா நகர் பொருத்தமானதாக இருக்கவில்லை. எனவே, தனது இலக்குகளை அடைவதற்குப் பொருத்தமான ஒரு பூமியைத் தெரிவு செய்து அங்கு செல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது.
3.       ஹிஜ்ரத் ஒரு சாதாரணப் பயணம் அல்ல! அண்ணலார் அவர்கள் 13 ஆண்டுகாலமாக மக்காவில் ஆற்றிவந்த ஏகத்துவப் பிரச்சாரத்தின் வீரப்பயணம்!


3.      ஹிஜ்ரத் திட்டமிடப்பட்ட ஒரு பயணம்
1.       இந்த இரகசியம் அபூ பக்ர், அலி (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகிய இருவருக்கு மாத்திரமே தெரிந்திருந்தது. ஏனெனில், குறைஷிக் காபிர்கள் நபியவர்களின் ஒவ்வொரு அசைவையும் மிகக் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருந்தார்கள்.
2.       அப்போது இறைத்தூதர் திருக்குர்ஆனில் 36 ஆவது அத்தியாயமான சூரா யாஸீனின் ஆரம்ப வசனங்களை ஓதிக் கொண்டே வெளியேறினார்கள். .

3.       பயணத்தின்போது மக்காவிலிருந்து மதீனா நோக்கிச் செல்லும் வழமையான பாதையை விடுத்து வேறொரு பாதையை தேர்ந்தெடுக்கின்றார்கள். அப்பாதைக்கு வழிகாட்டியாக அப்துல்லாஹ் இப்னு உரைகத் எனும் முஸ்லிமல்லாத ஒருவரை நியமித்தார்கள்
4.       அவர்கள் இருவருக்கும் உணவு கொண்டுவந்து கொடுக்கும் பொறுப்பை அஸ்மா பின்த் அபீ பக்ர் ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு வழங்குகின்றார்கள்.
5.       தனது படுக்கையில் தனக்குப் பதிலாக அலி ரழியல்லாஹு அன்ஹு
6.       உணவு கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்டவர்கள் வருகின்றபோது அவர்களின் கால் அடையாளங்கள் மணலில் பதியும். அவற்றை வைத்து குறைஷிக் காபிர்கள் அவர்களை வந்தடைந்துவிடக் கூடும் என்று அஞ்சிய தூதர், ஆமிர் இப்னு ஸுஹைரா என்பவரை அடையாளங்களை அழிப்பதற்கு நியமித்தார்கள்
4.      ஹிஜ்ரத்தின் பின்
நபியவர்கள் அன்ஸாரிகளையும் மு'hஜிர்களையும் சகோதரக் கட்டுக்கோப்பில் பிணைத்தார்கள். அந்த சகோதரக் கட்டுக்கோப்பில் மதீனா சமூகம் உருவாகியது. மக்காவிலே தனிமனிதர்களாக சிதறி வாழ்ந்தவர்கள் மதீனாவில் ஒரு சமூகமாக கட்டுக்கோப்பாக இணைகின்றார்கள்.

5.   ஹிஜ்ரி வருடம் காரணம் யாது
1.   அபூமூஸா(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உங்களிடமிருந்து கடிதம் வருகிறதுஆனால் அதில் காலம் குறிப்பிடப்படுவதில்லைஎன்று கூறியிருந்தார்கள்.
2.   உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து 'வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?' என ஆலோசனை கேட்டார்கள்.
3.   அலீ(ரலி) அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பு பூமியை விட்டு விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்என்றார்கள். அவ்வாறே உமர்(ரலி) அவர்கள் செய்தார்கள்.
4.   எந்த மாதத்தை முதல் மாதமாக கணக்கிடுவது என்பதில் சிலர் ரஜப் என்றும் சிலர் ரமளான் என்றும் குறிப்பிட்டனர்.
5.   உஸ்மான் (ரலி)  அவர்கள்  'முஹர்ரம்'  என்று கூறினார்கள்.' ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம். (போர் தடைசெய்யப்பட்ட மாதம்) மேலும்மக்கள் ஹஜ் செய்து விட்டுத் திரும்பும் போது வரும் முதல் மாதம்' என்று குறிப்பிட்டார்கள்.
6.   உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி  16 அல்லது 17வது ஆண்டில் இந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது

ஆஷுரா தினம் நோன்பு
1.   ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப் பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும்.
2.     அதற்கு நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும் படி ஏவினார்கள். அதை நாமும் பின்பற்றி அந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.
3.     யூதர்களுக்கு மாறு செய்வதற்காக ஒன்பதாம் நாளையும் சேர்த்துக் கொள்வது சுன்னத்தாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் ஒன்பது மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்தும் அதிகம் நன்மையை ஈட்டித்தரும் அமலுமாகும்.
4.   இந்த நோன்பை நோற்பவரின் முன் சென்ற வருடத்தின் சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்.
5.     ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

6.     ரமழான் (நோன்பிற்கு) முன் ஆஷுர நோன்பு (அவசியமாக) நோற்கப்படக்கூடிய ஒன்றாக இருந்தது. ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது விரும்பியவர்கள் அதை நோற்றார்கள்.  விரும்பியவர்கள் அதை விட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

பத்தாம் நாளோடு சேர்த்து ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்

1.     அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாம் நாளையும் நோற்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
2.     ஆஷுரா தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர் வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)

இஸ்லாமிய நாளேடு
1.     இஸ்லாமிய நாளேடு சந்திரனை அடிப்படையாக கொண்டதினால், ஆங்கில நாட்காட்டியைவிட 11 நாட்கள் குறைவானது. ஒரு வருடம் 354 அல்லது 355 நாட்களை கொண்டது. மாதங்கள் காலங்களை அடிப்படையாக கொண்டு இல்லை
2.     முஸ்லிம் பண்டிகைகள் வெவ்வேறு காலங்களில் வரும். எடுத்துக்காட்டாக நோன்பு பெருநாள் வெயில் காலத்திலும் மழைக்காலத்திலும் வரும். ஹிஜ்ரி மாதம் ஆரம்பம், முதல் பிறை மட்டும் அடிப்படையாக அல்லாமல், அந்தந்த இடங்களில் கண்ணால் பிறை பார்பதையும் அடிப்படையாக கொண்டுள்ளது. ஆகையால்,
3.     முக்கியமான பண்டிகைகள் முன்னமே அச்சிடப்பட்ட ஹிஜ்ரி நாட்காட்டிகளை மட்டும்வைத்து முடிவு செய்யாமல் கண்ணால் பிறை பார்ப்பதை வைத்து முடிவு செய்யப்படுகிறது. 
இபாதத்தில் பிறை
தொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் இத்தா
உலகில் 40 கலண்டர்கள்
இன்றைய உலகில் 40 கலண்டர்கள் உபயோகத்தில் உள்ளன. ஆனாலும் நாம் அறிந்து பழகிய ஒன்று கிறிஸ்த்துவக் கலண்டரே
கூட 1582ம் ஆண்டு திருத்தங்களிற்குட்பட்டதே.

ஒரு சமூகத்தில் கலண்டர்கள் உபயோகத்தில்
ஒரு சமூகத்தில், விவசாயிகள், இடையர்கள், வேட்டைக்காரர்கள், கடற்தொழிலாளிகள் என பலவகையினர் இருப்பார்கள். அவர்களது அலுவல்கலிற்கேற்ப காலத்தை வகுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கிருந்தது. மாணவர்கள் படிக்கிற காலங்கள்
காலண்டர் அச்சடிப்பது
12 இராசிகளின் பெயராலேயே வழங்குகின்றனர். இராசிகளின் பெயர்களாவன: மேடம், இரிடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனசு, மகரம், கும்பம், மீனம். ஒரு நாளின் நட்சத்திரமாகக் கருதப்படுவது
பிறந்தநாள் கொண்டாட்டம்
1.       தன்னுடைய குழந்தையின் பிறந்தநாள் 2012 - பிப்ரவரி-18 -சனிக்கிழமை  என்ற ஒருநாளை...  அடுத்தவாரம் சனிக்கிழமை வரும்போது அவர் கண்டுகொள்வதில்லை
2.       குழந்தை பிறந்துதான் ஒருவருஷம் ஆச்சே..? உயிரோடு இருக்கும் அதே குழந்தை ஒரு வருஷம் கழித்து அன்று மீண்டும் ஒருமுறை எப்படி பிறந்தது..? 
3.       ... Birth Day  என்கிறார்..! பெரிய சைஸ் கேக் ஒன்றை ஆர்டர் கொடுத்து, மத்தியில் ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தி, அதனை உடனே ஊதி அணைத்ததும் கூடி இருந்த மக்கள் அனைவரும் இந்த சாதனைக்கு கைதட்டி  "wish  you happy birthday to you"
4.       வருஷா வருஷம் 'பிறந்த நினைவு நாளுக்கு'... "wish you happy birth anniversary"என்று ஒருவரும் சொல்வதில்லை..! "wish you happy birthday" என்கிறார்கள்..! ஏதோ... 'அன்று அவர் மீண்டும் பிறந்துவிட்டார்' என்பது போல..! 
5.       பிறந்த மருத்துவ மனையில் உள்ள மகப்பேறு மருத்துவரை அணுகி, "இன்னிக்கி எம்புள்ளைக்கு பொறந்தநாளு... birth certificate கொடுங்கன்னு" கேட்டால் என்ன நடக்கும்...
இறந்த நாள்
1.       அதேபோல, ஒருவர் இறந்த வருடாந்திர நாளை "நினைவுநாள்" என சரியாக சொல்கிறார்கள்..! "இறந்தநாள்" .'Death Day' என்பதில்லை..! 'Annual Death Anniversary' என்றுதான் ஆங்கிலத்திலும் சொல்வார்கள்..! 
2.       ஒரு மனிதருக்கு வாழ்வில் ஒரே ஒருநாள்தான் பிறந்தநாள் வரமுடியும். அதேபோல ஒரே ஒருநாள் மட்டுமே இறந்தநாள் வரமுடியும்.
3.       இஸ்லாத்தில் இதுபோல இறப்புக்கும் பிறப்புக்கும் 'வருடாந்திர நினைவு நாள்துக்கமாக இருப்பதோ அல்லது கொண்டாடுவதோ கிடையாது. இறந்த அன்றும் அடுத்த இரண்டு நாள் மட்டும் துக்கம் அனுஷ்டிக்கலாம். 
4.       குழந்தை பிறந்த அன்று ஆடு அறுத்து 'அகீகா' விருந்து போட்டு (மூன்றில் ஒரு பங்கை ஏழைக்கு கொடுத்து) கொண்டாடலாம்..! 

5.       ஆனால், 'அடுத்த வருடம் மீண்டும் ஆடு அறுக்கனுமா' என்றால்... கிடையாது..! ஏன்..?

No comments:

Post a Comment