Search This Blog

Tuesday, November 7, 2017

இஸ்லாமிய பார்வையில் பதவி மோகம்


இஸ்லாமிய
 பார்வையில்
பதவி மோகம்
أَهُمْ يَقْسِمُونَ رَحْمَتَ رَبِّكَ ۚ نَحْنُ قَسَمْنَا بَيْنَهُم مَّعِيشَتَهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا ۚ
(                                               நபியே!) உமதிரட்சகனின் அருளை அவர்களா பங்கிடுகிறார்கள்? இவ்வுலக வாழ்வில் அவர்களுடைய வாழ்க்கை(த் தேவை)யை அவா;களுக்கிடையில் நாமே பங்கிட்டிருக்கிறோம்.”(43: 32)                                                                    
நாம் உலகத்திற்கு வரும்போது வெறுங்கையுடனே வந்தோம்; எதையும் எடுத்துக்கொண்டு வரவில்லை. நிர்வாணமாக வந்தோம்; எதையும் அணிந்துக்கொண்டு வரவில்லை. அவ்வாறே நாம் உலகிலிருந்து செல்லும்போது வெறுங்கையுடனும், கஃபன் புடவையுடனும்தான் செல்லவிருக்கிறோம். பிறப்பிற்கும் இறப்பிற்குமிடையில் நாம் உலகில் மிகக் குறுகிய காலங்களே வாழக்கூடியவா;களாக இருக்கிறோம்.
அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகள்
இந்த குறுகிய காலங்களில் வாழ்வதற்குத் தேவையான அருட்கொடைகளை மனிதா;களுக்கு மத்தியில் அல்லாஹுத் தஆலா பிhpத்து வழங்கியிருக்கிறான்.
இவை ஒவ்வொன்றைப் பற்றியும் அல்லாஹுத் தஆலா மறுமைநாளில் கேள்வி கணக்குக் கேட்பான்.
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.                     (102:8)

எந்த அளவுக்கு என்றால் மனிதன், கடும் சூட்டில் அவன் குடித்த குளிர்ந்த நீரைப் பற்றியும், வெய்யிலிருந்து பாதுகாப்புப் பெற ஒதுங்கிய நிலழைப் பற்றியும் கேட்கப்படுவான்.
إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولاً
நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.”         (17: 36)
ஒவ்வொருவரும் பொறுப்பாளியே
 “உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. மேலும் உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார் தன் பிரஜைகள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவார். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார். பெண் தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் (அடிமை) தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவை பற்றி விசாரிக்கப்படுவான்.
இதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து அறிவித்த இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நான் இவற்றையெல்லாம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவா;களிடமிருந்து செவியுற்றேன். மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மனிதன் (மகன்) தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவனது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவன் விசாரிக்கப்படுவான்.
ஆக நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள் என்று சொன்னதாக எண்ணுகிறேன்என்று கூறினார்கள்.       (நூல்: புகாhp, ஹதீஸ்: 2558)

எனவே, யாரும் தங்களின் பொறுப்பை, அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு அவரவர் நினைத்த மாதிரி செயல்பட முடியாது.
மேலும் ஒரு நீதிபதி எந்த நிலமையில் தீர்ப்பளிக்க வேண்டும்? எந்த நிலமையில் தீர்ப்பளிக்கக் கூடாது? என்பதையும் கூட இஸ்லாம் விட்டு வைக்கவில்லை.
நபி (ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்) அவா;கள் சொன்னாகள்.ஒரு நீதிபதி தான் கோபமுற்ற நிலையில் (இருக்கும்போது) இருவருக்கு மத்தியில் தீர்ப்பளிக்க வேண்டாம்.”(நூல்: புகாரி, ஹதீஸ்:7158)               
இவ்வாறு ஒவ்வொரு பொறுப்பிலுள்ளவா;களும் தங்களது பொறுப்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று இஸ்லாம் வழிகாட்டியிருக்கிறது.
நாம் மேற்கூறிய பதவிகளையும், அதிகாரங்களையும் பொறுப்புகள் என நினைக்க வேண்டுமே தவிர, அவற்றைக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடாது. 
பொறுப்புகள் என்பவை ஒப்படைக்கப்படுபவையே தவிர, அவை கேட்டுப்பெறத்தக்கவை அல்ல.
பொறுப்புகள் என்பவை ஒப்படைக்கப்படுபவையே தவிர, அவை கேட்டுப்பெறத்தக்கவை அல்ல. அவ்வாறு கேட்டுப்பெறுவதின் பாரதூரங்களை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவா;கள் தெளிவுபடுத்தி எச்சரிக்கைச் செய்திருக்கிறார்கள். மேலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் சொல்லாமல் விடவில்லை.
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவா;கள் கூறினார்கள்.         அப்துர்ரஹ்மான்   இப்னு சமுரா (ரழியல்லாஹு அன்ஹு)  அறிவித்தார்கள்.
பொறுப்பை (நீங்களாக)க் கேட்காதீர்கள்
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (என்னிடம்), அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவே! ஆட்சிப் பொறுப்பை (நீங்களாக)க் கேட்காதீர்கள். ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள். கேட்காமல் உங்களுக்கு அது அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு (அல்லாஹ்வின்) உதவி கிடைக்கும்.” (நூல்: புகாரி, ஹதீஸ் 7146)
மேலும் இந்தப் பதவிகளும் பொறுப்புகளும் பாரமானவை. விரும்புபவர்களெல்லாம் இவற்றைச் சுமக்க இயலாது. பொறுப்புகளை கையில் எடுத்தால் அவற்றைச் சாpயான முறையில் நிறைவேற்றுவதற்கு அதிகமான மனிதா;கள் சக்தி பெற மாட்டார்கள்.
அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதரே! என்னை நீங்கள் பதவிக்கு நியமிக்க மாட்டீர்களா?” என்று நான் கேட்டபோது அவா;கள் தம் கையால் என் தோளைத் தட்டி விட்டு 'அபூதா;ரே! நீர் பலவீனமானவர் ஆனால் பதவி (அதிகாரம்) என்பதோ அமானிதமாக இருக்கிறது. யார் அப்பதவிக்கு வந்து பொறுப்புக்களை சாpயாக நிறைவேற்றுகின்றாரோ அவரைத் தவிர ஏனையோருக்கு அது இழிவையும் வருத்தத்தையுமே கொடுக்கும்எனக் கூறினார்கள். (நூல்: முஸ்லிம், ஹதீஸ் 1825)
பொறுப்பிலுள்ளவர்களின் தகுதிகள்
இமாம் கஸ்ஸாலி (ரஹ்மத்துலாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்:
       யார் அல்லாஹ்வைப் பயந்து நடக்கிறார்களோ அவகளைக் கண்டு  எல்லா (படைப்பினங்களு)ம் பயப்படுகின்றன. யார் அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு யாரையேனும் பயப்படுகிறாரோ அவருக்கு அனைத்திலிருந்தும் பயந்து கொண்டே இருப்பார்.” (நூல்: இஹ்யாஉ உலூமித்தீன்)
1.            தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பண்பாக இஸ்லாம் தக்வாவை தான் கருதுகிறது. 'மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்' (புகாரி முஸ்லிம்)
2.            மஷீரா - தன்னிச்சையாக முடிவெடுக்காமல் இறையச்சமும்      ஞானமும் நிரம்பிய
3.            எதிர்கொள்ளும் நவீன பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்வு சொல்ல வேண்டியவராய் இருத்தல் அவசியம்.
4.            நீதி செலுத்துதல் - தலைவராக இருக்க கூடியவர்கள் எந்த சொந்தங்கள் இரத்த பந்தங்கள் செல்வாக்கு அதிகாரத்துக்கும் பணியாமல் சரியான முறையில் நீதி வழங்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.
5.            சேவை மனப்பான்மை - 'சமூகத்தின் தலைவர் மக்களின் சேவகராவார்'
6.            தனக்கு கீழ் உள்ள தொண்டர்களை புரிந்து கொண்டுஇ வேலையை பகிர்ந்து கொடுக்க வேண்டும்.
முதல் கலீஃபாவாக பதவியர்ப்பு நிலை
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு, யார் அவாகளின் கலீஃபாவாக வர வேண்டும் என்பதில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பெரிய கருத்து வேறுபாடு நிலவயிது.
உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவா;கள் மக்களை நோக்கி  நீங்கள் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவா;களிடம் சென்று சத்தியப் பிரமாணம் (பைஅத்துச்) செய்து கொள்ளுங்கள்என்று கூறினார்கள்.
இதைக் கேட்டதும் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவா;களிடம், “(உமரே!) நீங்கள்தாம் என்னை விட மிகவும் பலம் மிக்கவர்கள்”; என்று கூற,
உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவா;கள், “(அபூபக்ரே!) நீங்கள்தாம்   என்னை விட மிகச்சிறந்தவர்கள்என்று பதில் கூறிவிட்டார்கள்.
இவ்வாறு இரு ஸஹாபாக்களும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி தலைமைத்துவத்தை ஏற்க மறுக்க, இறுதியாக உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்,“(அபூபக்ரே!) உங்களுடைய சிறப்புடன் எனது பலமும் சக்தியும் சோ;ந்து உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றுகூறி அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவா;களின் மீது இப்பொறுப்பு சுமத்தப்பட்டது. பிறகு, நிர்பந்தத்தின் பெயாpல் அதை அவா;கள் ஏற்றுக் கொண்டார்கள்.               (நூல்:ஹயாதுஸ் ஸஹாபா, பாகம்:2, பக்கம்:19)
மக்களுக்கு மத்தியில் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார்கள்
இவ்வாறு ஒருவழியாக அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவா;கள் கலீஃபாவாக ஆக்கப்பட்டு விட்டார்கள். பிறகு அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவா;கள் எழுந்து நின்று மக்களுக்கு மத்தியில் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார்கள்,
“(மக்களே!) ஒரே ஒரு இரவிலோ, அல்லது பகலிலோ, கூட தலைமைத் துவத்தை நான் ஆசைப்பட்டுதும் இல்லை. அதை நான் பிhpயப்படவுமில்லை. இரகசியமாகவோ அல்லது வெளிரங்கமாகவோ அல்லாஹ்விடம் இதை நான் கேட்டதுமில்லை. மாறாக, இதனால் நான் குழப்பத்தைத்தான் அஞ்சுகிறேன். எனக்கு தலைமைத்துவத்தில் நிம்மதி என்பதே இல்லை.”(நூல்: பைஹகி, பாகம்: 8, பக்கம்: 152)                                                                                               
அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவா;களின் கையில் கிலாஃபத் ஒப்படைக்கப்பட்டதும் அதை அவா;கள் பாக்கியமாக கருதிக்கொண்டு இருந்து விடவில்லை. மாறாக, அதன் விபாPதங்களையும் பாரதூரங்களையும் விளங்கி இருந்ததன் காரணத்தினால் எப்படியாவது கிடைத்ததையும் ராஜினாமா செய்து விடுவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா? என்று தேடக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அபூ ஜஹ்ஹாப் (أبو الجحَّاف) (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவா;கள் பைஅத் செய்யப்பட்டு கலீஃபாவாக தோ;ந்தெடுக்கப்பட்ட பிறகு மூன்று நாட்கள் வரை வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்கள் ஒவ்வொரு நாளும் வெளியில் வந்து,
நான் உங்களது பைஅத்தை ஏற்கத் தயாராக இல்லை. நீங்கள் யாரை விரும்புகிறீர்களோ அவரை கலீஃபாவாக தோந்தெடுத்து, அவாpடமிருந்தே பைஅத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்என்று கூறக்கூடியவா;களாக இருந்தார்கள்.
அலி (ரலி) அவர்கள் கூறியது
 “நாங்கள் உங்களை நீக்கம் செய்யவும் மாட்டோம். உங்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம். (ஏனெனில்) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவகளே (கிலாஃபத்திற்காக) உங்களை முற்படுத்தியிருக்க பிறகு யார் தான் உங்களைப் பிற்படுடத்த முடியும்?” என்று கூறினார்கள்.                        (நூல்: ஹயாதுஸ் ஸஹாபா, பாகம்:2, பக்கம்:27)
உமா; இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) பதவி நிலை
ஹஸ்ரத் உமா; இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்மத்துலாஹி அலைஹி) அவர்களைப் பற்றி அவாpன் மனைவி ஃபாதிமா பின்து அப்துல் மலிக் கூறுகிறார்கள்.
“(எனது கணவரை) அல்லாஹுத்தஆலா கலீஃபாவாக ஆக்கிய நாள் முதல் மரணிக்கும் வரை மனைவியுடன் சோ;ந்ததினாலோ அல்லது தூக்கத்திலோ அவருக்குக் குளிப்புக் கடமையாகி குளித்ததை நான் கண்டதே இல்லை.(நூல்: தாhPகுல் குலஃபா, பக்கம்: 235)
முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) அவர்களின் சம்பவமும்.
முஹம்மது இப்னு மஸ்லமா (ரழியல்லாஹு அன்ஹு) அவா;களின் சம்பவமும். இஸ்லாத்தின் மீது வஞ்சகம் செய்து  கொண்டிருந்த  எதிhpகளில் ஒருவன் கஃப் இப்னுல் அஷ்ரஃப். இவனைக் கொலை செய்யும் பொறுப்பு இந்த ஸஹாபியிடம்  தான் ஒப்படைக்கப்பட்டது. இதற்குப் பிறகு வீடு திரும்பியதும், தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நினைத்து நினைத்து சாப்பிடுவதையும், நீர் அருந்துவதையுமே விட்டுவிட்டார்கள். இந்த செய்தி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு, அவர் அழைத்துவரப்பட்டார். பிறகு, நபி (ஸல்லல்லாஹு அலைஹி   வஸல்லம்) அவர்கள் அந்த ஸஹாபியிடம் இதற்குரிய காரணத்தைக் கேட்டபோது நான் (கொடுத்த வாக்கை) நிறைவேற்றுவேனா அல்லது இயலாமல் போய்விடுமோ என்ற பயம்தான்என்று பதில் கூறினார்கள்.(நூல்: ஃபத்ஹுல் பாhp, பாகம்: 7, பக்கம்: 237)
இன்று மக்கள் மத்தியில் தலைமைத்துவத்தின் மீது பேராசையும் பதவி மோகமும் தலைவிhpத்தாடுகின்றன. உலகின் எல்லா துறைகளிலும் இந்த நோய் தொற்றிக் கொண்டிருக்கிறது.
நாங்கள் தலைமைத்துவத்திற்கு தகுதியானவர்கள் என அதிகமானவர்கள் தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்கின்றனர். தம்மை மக்கள் மத்தியில் தலைவர்கள் என்று காண்பிப்பதற்கு பல இலட்சங்களைச் செலவு செய்கின்றனா;.
இந்தப் பதவி மோகம் எந்த அளவு பயங்கரமானது என்றால், சிலவேளை குறிப்பிட்ட பதவியை அடைவதற்காக உடன்பிறந்த சகோதரா;களையும் ஏன்? பெற்றெடுத்த பெற்றோகளையும் கூட துணிந்து கொலை செய்யச் செய்துவிடுகிறது.
தன்னை வேறுபடுத்திப் பார்ப்பதை அல்லாஹ் வெறுக்கிறான்
நபிமார்களுக்கெல்லாம் தலைவரான முஹம்மது நபி (ஸலம்) அவா;கள் இந்த விடயத்தில் முன்மாதிhpயாகத் திகழ்ந்திருக்கிறார்கள். இந்த முறையைத்தான் தமது வழி முறையாக்கிக் காண்பித்திருக்கிறார்கள்;.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவா;கள் அறிவிக்கிறார்கள்:
இன்னொருமுறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவா;கள் ஒரு பயணத்தில் இருக்கும்போது ஓர் ஆட்டை அறுத்து சரி செய்யுமாறு ஸஹாபாக்களுக்கு உத்தரவிட்டார்கள்.
அவர்களில் ஒருவர் கூறினார்: “இதனை அறுப்பது எனது பொறுப்பு.என்றார்
மற்றொருவர் இதனை உரிப்பது எனது பொறுப்புஎன்று கூறினார்.
வேறொருவர் இதனை சமைப்பது என் பொறுப்புஎன்று கூறினார்.
இதைக் கேட்டதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவா;கள்
விறகுகளைப் பொறுக்கிக் கொண்டுவருவது என் பொறுப்புஎன்று கூறலானார்கள்.
      உடனே ஸஹாபாக்கள் (அல்லாஹ்வின் தூதரே!) நீங்கள் இருங்கள்! அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்என்று கூறினார்கள்.
                அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவா;கள் நீங்களே பார்த்துக்கொள்வீர்கள் என்பது எனக்குத் தொpயும், ஆனால், உங்களைவிட்டும் தனித்து வேறுபட்டிருப்பதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன்.
 “அடியான் தனது சகாக்களுக்கு மத்தியில் தன்னை வேறுபடுத்திப் பார்ப்பதை அல்லாஹ் வெறுக்கிறான்என்று கூறிவிட்டு எழுந்துச் சென்று விறகுகளைச் சோ;த்து வந்தார்கள்.(அர்ரஹீகுல் மக்தூம்)
உலகில் பின்வரும் தலைவா;களுக்கெல்லாம் மிகச்சிறந்த முன்மாதிhpயாக வாழ்ந்து காட்டிய நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவா;கள் அல்லாஹ் விரும்பாத விடயங்களை விட்டும் இந்த அளவுக்கு தவிர்ந்து இருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு சிறிய, பொpய அனைத்து விடயங்களிலும் அல்லாஹ்வைப் பயந்து நடந்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று பதவிகளில், பொறுப்புகளில் உள்ளவா;கள் தங்களை அல்லாஹ் விசாரிப்பான் என்ற பயமோ, அல்லது தவறிழைத்து விடுவோமோ என்ற எந்த வித அச்சமோ இல்லாமல் தாங்கள் சந்திக்கக் கூடிய பிரச்சினைகளில் தங்களின் இஷ்டப்படி துணிச்சலோடு முடிவுகளை எடுத்துக் கொள்கின்றனர் சர்வசாதாரணமாக மார்க்கத்தின் வழிகாட்டல்களைப் புறக்கனித்துவிடுகின்றனா;.

No comments:

Post a Comment